×

அரசு பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணராயபுரம், மார்ச்28: அரசு பள்ளி ஆண்டுவிழாவில் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிந்தலவாடி ஊராட்சி மகிளிபட்டி அரசு துவக்க பள்ளியின் 7ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரினா பேகம் தலைமை வகித்தார். பள்ளி உதவி ஆசிரியர். தினேஷ் குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி மேற்பார்வையாளர். முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர் மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் மற்றும் நகைச்சுவை நாடகங்கள் நடைபெற்றது. மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நேரு, பள்ளி மேலாண்மை குழு தலைவர். ஜீவா, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர். மருதநாயகம், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Krishnarayapuram Union Chinthalavadi Panchayat Maglipatti Government ,Primary ,School ,Zerina Begum ,Dinakaran ,
× RELATED அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க...