×

அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் தரமான விதைகள் இருப்பு வைத்து மானிய விலையில் வழங்கப்படுகிறது

* விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுங்கள்

* ஆய்வுக்கு பின் கலெக்டர் அழைப்பு

கரூர் : கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் முனையனுர் கிராமத்தில் தமிழக அரசின் சாகுபடி மானியம் பெற்று சோளம், கோ 32 ரகம் சாகுபடி செய்து அதன் மூலம் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுவதை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:தமிழக முதல்வர் உத்தரவின்படி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக விவசாயிகளுக்கு த கரமான விதைகளை வழங்கி அதன் மூலம் அவர்கள் அதிகளவில் உயர்ரக சாகுபடி செய்து, டுதல் மகசூல் மற்றும் கூடுதல் வருமானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கரூர் மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகளின் நிலத்தில் சாகுபடி மானியம் வழங்கி தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகளை அரசின் விதை பண்ணைகளில் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு அதை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி அதன் மூலம் அவர்கள் நல்லதொரு முதன்மையான விதைகளை பெற்று அதிகளவில் மகசூல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 2024, 2025ம் ஆண்டு தமிழ்நாடு விதை மேம்பாட்டு கழகத்தின் மூலம் நெல், சிறுதானிய பயிர் விதைகள், பயிறு வகை பயிர் விதைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிர் விதைகள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட விதை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.அதன்படி 10 வகையான நெல் ரகங்கள் 117 ஹெக்டேர் பரப்பளவில் விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 67053 கிலோ கொள்முதல் அதற்காக ரூ. 5.36லட்சம் மானியம் வழங்கப்படடுள்ளது.

துவரை 3383 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. நிலக்கடலை 68457 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 17.11425 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. எள் 1300 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக பல்வேறு தானியங்கள் பல்வேறு திட்டங்களில் 245530 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு அதற்காக ரூ. 53.7095 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2024, 25ம் ஆண்டு விதை விநியோகம் மானியம் பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெல் 125297 கிலோ ரூ. 22.145 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது. சோளம் 65000 கிலோ ரூ. 19.575 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. கம்பு 6574 கிலோ ரூ. 1.972 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

உளுந்து 18720 கிலோ ரூ,5.616 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. துவரை 12565 கிலோ ரூ. 6.4825 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. கொள்ளு 7385 கிலோ ரூ. 3.544 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. நிலக்கடலை 68000 கிலோ ரூ. 26.48 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. எள் 1300 கிலோ ரூ. 1.014 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் அனைத்து தானிய விதைகள் 316741 கிலோ ரூ. 92.5385 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிர் வாரியான விதைகளை அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான முதல் தரமான விதைகளை பெற்று அதன் மூலம் நல்ல மகசூல் செய்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

The post அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் தரமான விதைகள் இருப்பு வைத்து மானிய விலையில் வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Karur ,Mooyanur ,Krishnarayapuram taluk ,Karur district ,Go ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில்...