×

உதய சூரியன் சின்னத்திற்கு பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி, மார்ச் 28: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கே.ஈஸ்வரசாமி, நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர் மற்றும் ஒன்றியம்,பேரூர் என பல இடங்களில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்திலும், வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நகர் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து வருகிறார். இதில், கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆனைமலை கிழக்கு,ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி பல்வேறு கிராமங்களில் நேரடியாக சென்று உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி செல்லும் பகுதிகளில், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதிமுருகேசன், முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் நல்லூர் யுவராஜ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி,ஒன்றிய அவைத்தலைவர் திருஞானசம்பந்தக்குமார், பேரூர் கழக பால்ராஜ், டாக்டர் செந்தில்குமார்,கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தலிங்ககுமார்,அண்ணாத்துரை, சோமந்துரை சம்பத், ஜீவா, ஆர்எம் புதூர் ஆனந்த், அழகேசன், விஜய் கிருஷ்ணராஜ், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பகவதி மற்றும் இந்திய கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் உடன் சென்றனர்.

திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பின்போது, பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் என்னென்ன தேவை என்பதையறிந்து உடனே நிறைவேற்றி கொடுக்க பாடுபடுவேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, அனைத்து திட்டங்களையும், மக்களுக்கு சென்றடைய பாடுபடுவேன். இந்தியா தலை சிறந்த நாடாக மாறவும், மக்களின் துயர் போக்கவும், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கரத்தை மேலும் வலுப்படுத்தவும், அனைவரும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post உதய சூரியன் சின்னத்திற்கு பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி தீவிர வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi DMK ,K. Easwarasamy ,Pollachi ,DMK ,Nagar ,Union ,Perur ,Dinakaran ,
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்