×

பெரம்பலூர் /அரியலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மைக்ரோசாப்ட் பவர் பிஐ பயிற்சி வகுப்பு

பெரம்பலூர், மார்ச்26: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 18.03.2024 அன்று முதல் 22.03.2024 வரை ‘மைக்ரோசாப்ட் பவர் பிஐ’ என்ற தலைப்பில்; பயிற்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமா தேவி பொங்கியா முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை இளங்கலை மாணவி ஜோதிகா வரவேற்றார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி ஐசிடி அகாடமி ஒருங்கிணைப்பாளர் கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜீவா வாழ்த்தி பேசினார். தொழில் நுட்ப பயிற்சியாளர் செல்வி பாரதி, ஆசிப் ராஜா ஆகிய இரு தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் மாணவிகளுக்கு 5 நாட்கள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியின் மூலம் மாணவிகள் மைக்ரோசாப்ட் பவர் பிஐயின் கூறுகள் மற்றும் செயல்பாடுகளில் உள்ள நுணுக்கங்களை தெரிந்துக் கொண்டனர்.

பவர் பிஐ டெஸ்க்டாப்பில் தொடங்கி தரவு மாற்றம், காட்சிப்படுத்துதல் மற்றும் டேட்டா மாடலிங் போன்ற மேம்பட்ட நுட்பங்களை மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். இந்தத் திறன்களைக் கொண்டு மாணவிகள் அதிக ஊதியத்துடன் கூடிய சிறந்த வேலை வாய்ப்பை பெற முடியும். . இறுதியாக கணினி அறிவியல் துறை, இளங்கலை மாணவி ஆலியா பர்வீன் நன்றி கூறினார். இப்பயிற்சி வகுப்பை சிறந்த முறையில் நடத்தி முடித்தற்காக தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து “மைக்ரோசாப்ட் பவர் பிஐ சென்டர் ஆப் எக்சலன்ஸ்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.இப்பயிற்சியில் கணினி அறிவியல் துறை கணினி பயன்பாட்டியல் துறை ஆங்கிலத் துறை வணிக மேலாண்மை துறை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்த 100 மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

The post பெரம்பலூர் /அரியலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மைக்ரோசாப்ட் பவர் பிஐ பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Microsoft ,Thanalakshmi Srinivasan College of Arts and Sciences for Women, ,Perambalur ,Ariyalur ,Thanalakshmi Srinivasan College of Arts and Science for Women ,Thanalakshmi Srinivasan University ,Chancellor ,Vender Srinivasan.… ,Dinakaran ,
× RELATED நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்...