×

பைக் மீது கார் மோதி அரசு பெண் டாக்டர் பலி

 

செஞ்சி, மார்ச் 25: திருவண்ணாமலை டவுன் திண்டிவனம் சாலை பகுதியை சேர்ந்த சசிகுமார் மனைவி சித்ரா(43). இவர் செஞ்சி அருகே உள்ள நல்லான் பிள்ளைபெற்றாள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை திருவண்ணாமலையிலிருந்து பேருந்தில் கடலாடிகுளம் என்ற பகுதியில் இறங்கி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது புத்தகரம் கிராமத்தில் எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் அவர் சாலையோர வயலில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பைக் மீது மோதிய காரும் வயலில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த நல்லான்பிள்ளைபெற்றாள் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது கார் மோதி அரசு பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பைக் மீது கார் மோதி அரசு பெண் டாக்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Senchi ,Sasikumar ,Chitra ,Thiruvannamalai Town ,Tindivanam Road ,Nallan Pillaiparipal Government Primary Health Center ,
× RELATED எனக்கு எப்பவுமே அவரு தான் ஹீரோ! Soori Jolly Speech at Garudan Success Meet | Sasikumar | Vetrimaaran