- சைதாப்பேட்டை
- தென் சென்னை
- அஇஅதிமுக
- ஜெயவர்தன் குட்டி
- சென்னை
- ஜெயவர்தன்
- விருகம்பாக்கம்
- சைதாப்பேட்டை
- தென் சென்னை AIADMK
- தின மலர்
சென்னை, மார்ச் 24: சைதாப்பேட்டையில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் முதியோர் மருத்துவமனையை, பாராளுமன்றத்தில் வலியுறுத்தி, கொண்டு வந்தேன், என தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம், சைதாப்பேட்டை செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம், அதிமுக மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் கலந்து கொண்டார். பின்னர் ஜெயவர்த்தன் நிருபர்களிடம் கூறியதாவது: நான், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக 2014-19ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தபோது, பாராளுமன்றத்தில் வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து ரூ.140 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை தொகுதியில் தேசிய முதியோர் சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (முதியோர் மருத்துவமனை) கொண்டு வந்தேன்.
இந்த மருத்துவமனை கொரோனா காலகட்டத்தில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனால் சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் இந்த மருத்துவமனையால் காப்பாற்றப்பட்டது. தொடர்ந்து மக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மீண்டும் தற்போது, போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post சைதாப்பேட்டையில் ரூ.140 கோடியில் முதியோர் மருத்துவமனை அமைத்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் பேட்டி appeared first on Dinakaran.