- பங்குனி உத்திர தெப்பல் உற்சவம்
- வேதபுரீஸ்வரர்
- கோவில்
- சேயார்
- - நாள் திருவிழா
- வேபுபயீஸ்வரர் கோவில்
- திருவண்ணாமலை மாவட்டம்
- செய்யார் அனைத்து வர்த்தகர்கள்
- சங்க தெப்பல் விழா குழுவினர்
- ஸ்ரீ
- பங்குனி உத்திர தெப்பல் உற்சவம் 3 நாள் திருவிழா
செய்யாறு, மார்ச் 24: செய்யாறில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தெப்பல் உற்சவம் 3 நாள் விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்க தெப்பல் விழா குழுவினர் ஏற்று நடத்தும் ஸ்ரீ பால குருசாமி சமேத வேதபுரீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர செப்பல் விழா இன்று 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந்த 3 நாட்களில் சுவாமி அம்பாளுடன் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதி உலா வந்து மண்டபடி செய்யப்படும். இரவு தெப்பல் குளத்தில் சுவாமி அம்பாளுடன் அலங்காரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை மற்றும் மங்கள வாத்தியத்துடன் குளத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அதன்படி இன்று 24ம் தேதி காலை 6 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறும் தொடர்ந்து 10 மணி அளவில் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் மண்டபடியும் அதனைத் தொடர்ந்து ராஜாஜி பூங்கா, பஜார் வியாபாரிகள் மண்டபடி நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் சோடசோப தீபாரதனையும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமி தெப்பல் குளத்தில் எழுந்தருளி வலம் வருதல் நடைபெறுகிறது. இரவு 2 மணிக்கு உற்சவ மூர்த்திகள் கோயிலை வந்தடைவர். இதே போல் ஒவ்வொரு நாளும் சுவாமி பூறப்பாடும், மண்டபடியும், அபிஷேக ஆராதனைகளும் தெப்பல் வலம்பக்ஷ வருதலும் நடைபெறுகிறது. தெப்பல் விழாவிற்கான ஏற்பாடுகளில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், தெப்பல் விழா குழுவினரும் செய்து வருகின்றனர்.
The post செய்யாறில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தெப்பல் உற்சவம் 3 நாள் விழா: இன்று கோலாகலமாக தொடங்குகிறது appeared first on Dinakaran.