×

மாயாவதி கட்சி எம்பி திடீர் நீக்கம்

பல்ராம்பூர்: மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி சிரோமணி வெர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஸ்ராவஸ்தி தொகுதி எம்பி ராம் சிரோமணி வெர்மா. இவர் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கட்சியின் மாவட்ட தலைவர் லால் சந்த் கோரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம் சிரோமணி வெர்மா பலமுறை எச்சரிக்கப்பட்டும் அவரது பணிகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஷ்ராவஸ்தி எம்பி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மாயாவதி கட்சி எம்பி திடீர் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Mayawati party ,Balrampur ,Mayawati ,Bahujan Samaj Party ,Shiromani Verma ,Uttar Pradesh ,Sravasti ,Ram Chiromani Verma ,Sudden Removal ,
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...