×

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியை சென்னை நகருக்குள் அமைக்க இடம் உள்ளதா? அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு அதே பெயரில், திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்திலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சட்டக்கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சென்னை சட்டக் கல்லூரி 1891ம் ஆண்டில் கட்டப்பட்டது. கல்லூரியை மூடக்கூடாது. அதை புதுப்பித்து, கல்லூரியை அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்று கோரினர்.

அப்போது நீதிபதிகள், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் வைத்துவிட்டு, அதை இரண்டாக பிரித்து இரு மாவட்டங்களில் வைத்துள்ளதால் சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிற்சிக்கு வந்துசெல்வதும், மூத்த வழக்கறிஞர்களின் விரிவுரைகளையும் கேட்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியை சென்னை நகருக்குள் அமைக்க இடம் உள்ளதா? அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dr. Ambedkar Government Law College ,Chennai city ,CHENNAI ,Dr. ,Ambedkar Government Law College ,Chennai High ,Court ,Pattara Perumputhur ,Thiruvallur district ,Pudupakkam ,Kanchipuram district ,Dr. Ambedkar Govt. Law College ,Dinakaran ,
× RELATED சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம்...