×

வெற்றியும் ஜோதிடமும்

வாழ்வின் தடைகளை கடப்பதற்கும், வாழ்வின் அடுத்த நிலையை நோக்கி பயணிப்பதற்கும், முன்னேற்றம் மிக முக்கியம். முன்னேற்றம், ஒவ்வொரு மனிதனையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. அவன் செய்கின்ற பணி மிகவும் முக்கியமானதாகவும், மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால், இன்றைய காலத்தில் வெற்றியை அடைவதற்கு என்ன குறுக்கு வழியை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணத்தை பலர் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட எண்ணங்களால் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒருவர், சிறிது காலத்திற்குப் பிறகு, சறுக்கலை சந்திக்கின்றனர். அந்த சறுக்கல்கள், அவர்கள் மேற்கொண்ட தவறான செயல்கள்தான் என்பதை உணராமல் இருப்பது உண்மை. நேர்வழியில், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பது வெற்றிக்கான முதல்படி.

வெற்றிக்கான பாவகம் என்ன?

ஜோதிடத்தில், வெற்றியைக் குறிக்கக்கூடியது பதினோராம் பாவகம் (11ம்) ஆகும். சத்ருவிற்கு சத்ரு ஸ்தானம் என்றும் இந்த பதினோராம் பாவகத்தை குறிப்பதாகும். பதினோராம் பாவகத்தில் உள்ள உறவுகள், பதினோராம் பாவகம் வழியான தொடர்புகள், பதினோரம் பாவகத்தை பார்வை செய்யும் கிரகங்கள், பதினோராம் பாவகம் வழியான கிரகங்கள் அனைத்தும் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன.

பதினோராம் பாவகமும் தொடர்புகளும்

பதினோராம் பாவகத்தின் உறவுகள், மூத்த சகோதரம் (அண்ணன்), நண்பர்கள் குறிப்பாக, மூத்த வயதுடைய நண்பர்கள், மருமகள், மருமகன், மாப்பிள்ளை போன்ற உறவுகள் உங்களின் ஜாதகத்தில் பதினோராம் பாவகத்
தொடர்புடையவர்கள்.

பதினோராம் பாவகத்திற்குரிய உறுப்புகள் என்னென்ன?

முழங்கால், இடதுகை, இடது காது ஆகியவற்றை குறிக்கிறது. கடல் கடந்த பயணங்களும் பதினோராம் பாவகத்தையே குறிக்கிறது. விமானப் பயணங்களும் பதினோராம் பாவத்தைக் குறிக்கிறது.

வெற்றிக்கான பாவகத்தை எப்படி இயக்குவது?

*மூத்த சகோதரனுடனோ அல்லது மூத்த வயதுடைய நண்பர்களுடன் கோயிலுக்குச் செல்வது இன்னும் சிறப்பைத் தரும்.

*மூத்த சகோதரனுடன் ஆசி வாங்குவது உங்களின் பாவகத்தை இயக்கும். அவர்களுடன் குலதெய்வ கோயிலுக்குச் செல்வது இன்னும் சிறப்பை உண்டாக்கும்.

பதினோராம் பாவகத்தில் கிரகங்கள் வழியே…

*சந்திரன் இருந்தால், அம்பாளை திங்கள்தோறும் வழிபடுவது உங்களுக்கான வெற்றியை உறுதி செய்யும். முத்து கற்கள் பதித்த மணிகளை பயன்படுத்தலாம். வெட்ட வெளியில் உள்ள சந்திரக் கதிர்கள் விழும் அம்பாளை வழிபடுவது சிறப்பு.

*செவ்வாய் இருந்தால், செவ்வாய்தோறும் முருகரை அல்லது ஆஞ்சநேயரரை வழிபடுவது சிறப்பைத் தரும்முக்கியமாக, மலை மேல் அமர்ந்த முருகனை வழிபடுவது சிறப்பு. பவளத்தினால் செய்த
ஆபரணங்களை பயன்படுத்தலாம்.

*புதன் இருந்தால், புதன்கிழமை அன்று அல்லது புதன் ஹோரையில் பெருமாளை வழிபடுவது சிறப்பைத் தரும். மரகதப் பச்சைக் கற்கள் பதித்த ஆபரணங்களை பயன்படுத்தலாம். வயல் வெளிகளுக்கு இடையில் பெருமாளை வழிபடுவது இன்னும் சிறப்பைத் தரும்.

*வியாழன் இருந்தால், வியாழக்கிழமை தோறும் தவக்கோலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி அல்லது லிங்கத்தை வழிபடுவது சிறப்பைத் தரும். தங்கத்தால் ஆன ஆபரணத்தில் புஷ்பராகம் கற்கள் பதித்து அணிந்து
கொள்வது நலம்.

*சுக்கிரன் இருந்தால், வெள்ளிக்கிழமை தோறும் மாரியம்மனை, மல்லிகை கொண்டு வழிபடுவது வெற்றியைத் தரும். வைரம் பதித்த அணிகலன்களை அணிவதாலும் வெற்றிக்கான
பாவகம் இயங்கும்.

*சனி இருந்தால், வயதானவர்களுக்கும் அல்லது ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வதன் மூலம் வெற்றியை நோக்கி பயணிக்க வழி செய்யும். நீலநிறக் கற்களை இடது கையில் அணியலாம்.

*சூரியன் இருந்தால், தினமும் சூரியனை நமஸ்காரம் செய்வதும் சிவனை வழிபடுவதும் சாலச் சிறந்ததாகும்.மாணிக்கக் கற்களை அணியலாம்.

தொகுப்பு: சிவகணேசன்

The post வெற்றியும் ஜோதிடமும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…