×

பள்ளி செல்லா குழந்தைகள் 18 பேர் கண்டறியப்பட்டனர் கல்வியை தொடர ஏற்பாடு

மதுரை, மார்ச் 21: முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா வழிகாட்டுதலின்கீழ், மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கள ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில் இடைநிற்றல் பிரிவில் 4 மாணவர்களும், மாற்றுத்திறன் குழந்தைகள் பிரிவில் ஒரு மாணவியும் மற்றும் 6 வயது பூர்த்தி அடைந்த முதல் வகுப்பு மாணவர்கள் 13 பேர் என மொத்தம் 18 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் மதுரை எல்கேபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். முன்னதாக முதற்கட்ட கள ஆய்வு பணிகள் மார்ச் 18ல் மேற்கொள்ளப்பட்டது இதில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லா மாணவி ஒருவர் சக்கிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்த கள ஆய்வு பணிகளில் வட்டார கல்வி அலுவலர் ஜான்சி, மேற்பார்வையாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி செல்லா குழந்தைகள் 18 பேர் கண்டறியப்பட்டனர் கல்வியை தொடர ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Principal Education Officer ,Karthika ,School Cella ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை