×

2 ஆண்டுக்கும் மேலாக ஓயாத போர் ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு: இருதரப்புக்கும் ஆதரவு

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ஒரே நாளில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். புடினுடன் பேசிய போது, அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘ போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அதற்கான அமைதி முயற்சிகளுக்கும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை தெரிவித்துக் கொண்டேன். மேலும் உக்ரைனுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளேன்’’ என கூறி உள்ளார்.

The post 2 ஆண்டுக்கும் மேலாக ஓயாத போர் ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு: இருதரப்புக்கும் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Russia ,Ukraine ,New Delhi ,President ,Putin ,Zelensky ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!