டெல்லி: ED வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கப்பிரிவு காலவரையின்றி ஒருவரை சிறையில் வைப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கப்பிரிவு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதன் மூலம் ஒருவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்காவிடில், சிறையில் இருப்பவருக்கும் ஜாமின் பெற உள்ள உரிமையை ED தடுக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post ED வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.