×
Saravana Stores

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்.ஐ.ஏ. அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும்.

பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிய மந்திரி ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.பிரதமர் முதல் தொண்டர் வரை பாஜகவில் உள்ள அனைவரும் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சரின் இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Union ,Internet ,Minister ,Shoba Karanthlaje ,MLA ,K. Stalin ,Chennai ,Union BJP ,Bangalore Rameswaram ,Cafe ,Chief Minister ,Principal ,Mu. ,X ,Stalin ,Bangalore ,Union Minister ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...