- திருப்பூர் அரசு மருத்துவமனை குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
- திருப்பூர்
- கோயம்புத்தூர்
- துணை இயக்குநர்
- குடும்ப நலன்
- திருப்பூர் மாவட்டம்
- கௌரி
- திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
திருப்பூர், மார்ச்19:கோவை, திருப்பூர் மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் கௌரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இச்சிகிச்சை பயற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு 10 நிமிடங்களில் இலவசமாக செய்யப்பட உள்ளது.
கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்க விளைவுகளுமின்றி செய்யப்படும் இச்சிகிச்சையினை ஏற்றுகொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கதொகையாக ரூ.1.100, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வழங்கும் ஊக்கத்தொகை ரூ.1,000 மற்றும் திருப்பூர் ரேணுகா டெக்ஸ்டைல்ஸ் வழங்கும் ஊக்க தொகை ரூ.1,000 என மொத்தம் ரூ.3,100 வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இச்சிகிச்சையினை ஏற்பதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ,கடின உழைப்பிற்கோதடையேதுமில்லை.
பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை.பக்கவிளைவுகள் இல்லாத இச்சிகிச்சை முறையினை ஏற்று பொதுமக்கள் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிகிச்சைமுறை பற்றிய ஏதேனும் விவரங்களுக்கு 9942259775, 9443522517, 8072865541 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருப்பூர் அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.