×

தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் ராகவேந்திர சுவாமிகளின் 429ம் ஆண்டு ஜெயந்தி

 

தஞ்சாவூர், மார்ச் 17: தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. விஷ்ணு பக்தரான பிரகலாதனின் மறு அவதாரமாக ராகவேந்திர சுவாமிகள் திகழ்கிறார். தஞ்சாவூரில் 1621ம் ஆண்டு வேங்கடநாதன் என்று அழைக்கப்பட்ட ராகவேந்திர சுவாமிகள் துறவறம் ஏற்று சுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக  ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார். இந்த பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளுக்கு ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடக்கிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பிருந்தாவனத்தில் நேற்று காலை ராகவேந்திர சுவாமிகளின் 429வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு 108 கலச பூஜையும் அதனைத்தொடர்ந்து காலை10 மணிக்கு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு 108 கலச அபிஷேகம் மற்றும் விஷேட பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது.பகல் 11.30 மணிக்கு பட்டாபிஷேகம் மகோற்சவம் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் , தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர். ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை  ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் டிரஸ்டிஸ் விஜேந்திரன், கபிலன் செய்து இருந்தனர்.

The post தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் ராகவேந்திர சுவாமிகளின் 429ம் ஆண்டு ஜெயந்தி appeared first on Dinakaran.

Tags : Raghavendra Swami ,Thanjavur Vadavatangarai ,Thanjavur ,Raghavendra Swamy ,Brindavan ,Vadavatangarai ,Vishnu ,Pragalathan ,Venkatanathan ,Suthindra ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...