×

18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்: தமிழ்நாட்டில் ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: 18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்: முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்ட வாக்குபதிவுக்கு மார்ச் 20-ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நால் மார்ச் 27-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

2-ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் ஏப்.26-ம் தேதி நடைபெறும் எனவும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

The post 18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்: தமிழ்நாட்டில் ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 18th Parliamentary Election ,Lok Sabha Election ,Tamil Nadu ,Delhi ,Lok Sabha elections ,Tamil ,Nadu ,Lok Sabha ,Vlawangodu Assembly ,Election Commission ,Dinakaran ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மலர் தொட்டிகள் கொண்டு அலங்காரம்