- புதிய தமிழ்நாடு கட்சியாளர்கள் எதிர்ப்பு
- சங்கரன்கோவில்
- முருகன்
- வடக்கு புத்தூர்
- Sankaranko
- புதிய தமிழரசுக் கட்சி
- தெரதி திடல்
- சங்கரன்கோ
- புதிய தமிழ்நாடு
- கட்சி
- ஆர்ப்பாட்டங்கள்
- சங்கரன்கோவில்
- தின மலர்
சங்கரன்கோவில், மார்ச் 13:சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூரைச் சேர்ந்த வேன் டிரைவர் முருகன் (37). இவரை தாக்கிய3 போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று சங்கரன்கோவில் தேரடி திடலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போலீசார் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ராசையா, வடக்கு மாவட்ட செயலாளர் சாமித்துரை தலைமை வகித்தனர். நிர்வாகிகள் முகேஷ், முத்து, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சங்கர்குரு, மாநில துணை அமைப்பு செயலாளர்கள் கிருபைராஜ், ராஜேந்திரன், செல்லப்பா, இணைச் செயலாளர்கள் ஞானதாஸ், மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி செல்லதுரை, தென்காசி தெற்கு கிருஷ்ணபாண்டியன், விருதுநகர் குணம், நெல்லை முத்தையா ராமர், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பாலமுருகன், சரவணன், சுந்தர்ராஜ், ராமையா, மணிகண்டன், செல்வம், முருகேசன், கந்தவேலு சுப்புராஜ், முன்னாள் நகர செயலாளர் சங்கர்ராஜ் மற்றும் மகளிரணி, மாணவரணி, தொண்டரணியினர், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட விவசாய அணி செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.
The post சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.