திருப்பூர், மார்ச் 12: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக தத்தெடுத்த கிராமமான கருமாபாளையம் கிராமத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில்,“இம்முகாமில் கண் பரிசோதனை முகாம், பல் பரிசோதனை முகாம், கால்நடை மருத்துவ முகாம், ரத்த தான முகாம், முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு வாழ்வாதார பயிற்சிகளான தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மொழி ஆற்றல், நெகிழியை எதிர்த்தால், மஞ்சப்பையை அழைத்தல், பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி செய்து எப்படி?, சித்தா ஆயுர்வேதா கருத்தரங்கு போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளது.அதன்பின், வீடு வீடாக சென்று பல்வேறு விழிப்புணர்வுகளும், தூய்மைப்பணிகளும் நடைபெற உள்ளது’’ என்றார்.
தொடர்ந்து, மாணவ செயலர்கள் காமராஜ், சுந்தரம், ராஜபிரபு, விஜய், செர்லின் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ, மாணவிகள் 50 பேர் முகாமில் கலந்து கொள்கிறார்கள். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
The post நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கருமாபாளையம் கிராமத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.