×

வீட்டு வாடகையை அரசே ஏற்க கலெக்டரிடம் மனு

 

கோவை, மார்ச் 12: கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேற்று அளித்த மனு கூறியிருப்பதாவது: தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வீட்டு வாடகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வீடற்ற ஏழைகளுக்கும் எஸ்.சி மக்களுக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும். தவிர, உடனடியாக வீட்டு வாடகை குறைக்க வேண்டும். இலவச பட்டா வீடற்ற மக்களுக்கு கிடைக்கும் வரை வீட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும். கொடுத்த மனுக்களை விசாரணை செய்து இலவச பட்டா வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்க தனிச்சட்டம் வேண்டும். அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வீடற்ற மக்களுக்கு வழங்க வேண்டும்.

மாநில அரசின் நிதியை முழுவதும் மத்திய அரசு மாநில அரசிற்கே வழங்க வேண்டும். வாடகை வீடுகளின் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். மேலும், கோவை மாவட்டம் சூலூர் கலைமகள் நகரை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (85) என்ற மூதாட்டி தான் இறப்புக்கு கூட தனது மகன் வரக்கூடாது என்று நூதன கோரிக்கையுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,“எனது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் வாசுகி (49) மட்டும் என்னை கவனித்து வருகிறார். எனக்கு சொந்தமான சொத்துகளை மகள்களுக்கு பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post வீட்டு வாடகையை அரசே ஏற்க கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Goa ,general secretary ,Goa District Rent Tenants Association ,Vilhimali ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்