×

சிறந்த தமிழ் பொழிபெயர்ப்பு: கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இலக்கியத்துறைக்கு என்று வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருது சாகித்ய அகாடமி விருது ஆகும். இதில் மொழி பெயர்ப்பாளர்களுக்கு என்று தனியாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 மொழிகளில், வெவ்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் மமாங் தய் என்பவர் எழுதிய நாவலை தமிழில் ‘‘கருங்குன்றம்” என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

தற்போது அகில இந்திய வானொலியின் புதுச்சேரி நிலைய இயக்குநர் பொறுப்பில் உள்ள இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். சாகித்ய அகாடமி பெற்றதற்காக இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்படும். இதில் கருங்குன்றம் என்ற நூல் திபெத் எல்லைப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலை, மலைவாழ் மக்களின் காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கொண்ட புனைவு கதையாக எழுதப்பட்ட நாவல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post சிறந்த தமிழ் பொழிபெயர்ப்பு: கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kannayan Dakshinamurthy ,New Delhi ,India ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...