துபாய் : ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரில் ஏமனில் உள்ள ஹவுதி படையானது ஹமாஸ்க்கு ஆதரவு அளித்து வருகின்றது. இந்நிலையில் ஏடன் வளைகுடாவில் சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட சரக்கு கப்பல் சென்றது. இந்த கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
மேலும் யாரும் காயமடையவில்லை. இந்நிலையில் சிங்கப்பூர் கப்பல் தாக்குதல் பின்னணியில் தாங்கள் தான் இருப்பதாக ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் கப்பலான ப்ரோபெல் பார்சுன் தாக்குதலுடன், அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது 37 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
The post சிங்கப்பூர் கப்பல் மீது தாக்குதல் appeared first on Dinakaran.