மதுரை: தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் பாபி சிம்ஹா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்துள்ளார். கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் பாபி சிம்ஹா கே.ஜி.எஃப் பட நடிகர் ராமசந்திரன் ராஜீ மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வீடு கட்டியதற்கு பணம் கொடுப்பதற்கு சம்பந்தமாக புகார் அளித்த நடிகர் பாபி சிம்ஹாவின் நண்பர் உசேன் என்பவரிடம் சமரசம் செய்து கொண்ட நிலையில் தான் அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் அதனை பிராமண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறி உள்ளனர். எனவே தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என நடிகர் பாபி சிம்ஹா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி சுகுமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. நடிகர் பாபி சிம்ஹா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கின் புகார்தாரர் உசேன் மற்றும் பாபி சிம்ஹாவிற்கும் இடையே சமரசமாக நிலையில் அதற்கான பிராமண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். எனவே தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுவில் இருதரப்பு சமரச பத்திரத்தை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும். பின்னர் வழக்கின் நிலை குறித்து கொடைக்கானல் காவல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைகிளை ஒத்திவைத்தது.
The post தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் பாபி சிம்ஹா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு..!! appeared first on Dinakaran.