×

தனிச் சின்னத்தில் போட்டி: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு!

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள், மற்ற இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அதில் மதிமுக 2 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

மக்களவை தேர்தலில் மதிமுகவின் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. திமுகவில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டுக்குழுவோ, கடந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டது போல ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்குவதாகவும், ஒரு மக்களவை தொகுதியில் திமுகவின் சின்னமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என்றும் எடுத்துக் கூறினர். இரு கட்சியினரும் கருத்தில் தீவிரமாக இருந்தனர். திமுக, மதிமுக இடையே மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ; தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் முதல்வரும், நானும் கையெழுத்து இட்டுள்ளோம். ஒதுக்கப்படும் தொகுதி குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது மன நிறைவு தான். எங்களுக்கு ஒதுக்கிய தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்

மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. மாநிலங்களவை பதவி நிறைவடைய இன்னும் 15 மாதங்கள் உள்ளன. அதனால், அதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடத்தவில்லை இவ்வாறு கூறினார்.

The post தனிச் சின்னத்தில் போட்டி: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு! appeared first on Dinakaran.

Tags : Madimuga ,MLA ,Dhimuka Alliance ,Chennai ,Lok Sabha ,Marxist ,Indian Communist ,Indian Union Muslim League ,Komadeka ,Dimuka Alliance ,Communist ,MLAVAI ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...