×
Saravana Stores

வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1,647 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நேற்று 1,647 பயனாளிகளுக்கு ரூ.51,20,74,387 மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கு பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில் அவர் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2989 பயனாளிகளுக்கு சுமார் ரூ.59.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் சிறுகாவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் சிட்டியம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், குடியிருப்புக் கட்டிடம், ரூ.42.41 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாநகராட்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.2,84,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான கல்வெட்டுகள் திறந்து வைக்கப்பட்டன என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.வெங்கடேஷ், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், டெல்லிபாபு, சேகர், நிர்வாகிகள் சந்துரு, வெங்கடேசன், ஜெகநாதன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1,647 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Revenue and Disaster Management Department ,Kanchipuram ,Kanchipuram District Collector's Office ,Minister ,Thamo Anparasan ,Kanchipuram district ,Revenue, Disaster Management Department ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது வார்டில்...