- பார்மசி கல்வி தின விழிப்புணர்வு பேரணி
- கற்பக விநாயகா மருந்தியல் கல்லூரி
- மதுராந்தகம்
- பார்மசி கல்வி தினம்
- கார்பாகா விநாயக கல்லூரி
- மருந்தகம்
- தேசிய மருந்தியல் கல்வி தினம்
- கற்பக விநாயகா கல்லூரி
- மருந்தகம்
- படலம்
- மதுராந்தகம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- தின மலர்
மதுராந்தகம்: கற்பக விநாயகா மருந்தியல் கல்லூரியில் மருந்தியல் கல்வி தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி மேலாண்மை இயக்குனர் அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஐயப்பன் அனைவரையும் வரவேற்றார். இதில் தேசிய மருந்தியல் கல்வி தினம் குறித்து துணை பேராசிரியர் திவ்யா மாணவ, மாணவிகளிடையே விளக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி முதல்வர் சுவலா சுனில் விஸ்வேஷராவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மருந்தியல் கல்லூரியின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மருந்தியல் கல்லூரியின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணியாகச் சென்றனர். இறுதியாக துணைப் பேராசிரியர் கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.
The post கற்பக விநாயகா மருந்தியல் கல்லூரியில் மருந்தியல் கல்வி தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.