×

தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

 

ஒட்டன்சத்திரம், மார்ச் 6: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். எம்பி வேலுச்சாமி, துணை தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்திலேயே தூய்மையான நகராட்சியாக ஒட்டன்சத்திரம் நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் தினமும் மக்களை சந்திக்க வேண்டும். நகரின் வளர்ச்சிக்கு தேவையான மற்றும் விட்டு போன திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து கூட்டத்தில், மாதாந்திர வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி, வருவாய் ஆய்வாளர் விஜய் பால்ராஜ், நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வர், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Minister ,A. Chakrapani ,Ottanchattaram ,Council ,Municipal Office ,City Council ,President ,Thirumalaisamy ,Veluchamy ,Vice President ,Velikhamy ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...