×

₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் ₹16.50 கோடி மதிப்பில் நவீன மருத்துவ கருவிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

திருவாரூர், மார்ச் 5: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.16.50 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ கிராம் கருவியினை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
திருவாரூரில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையானது கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் இயங்கி வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்தும நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கு இயங்கி வரும் அவசர சிகிச்சை பிரிவிற்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்கு வந்து சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் விபத்துகளின் போது தலையில் ஏற்படும் காயத்திற்கு மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு மற்றும் மூளையில் ஏற்படும் கட்டி உட்பட பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிப்பதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது முக்கியமாக இருந்து வருகிறது. இந்த ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னரே அதற்குரிய சிகிச்சையினையும் மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இயங்கி வந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையமானது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பழுது காரணமாக கடந்த 10 மாத காலமாக இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

எனவே இதனை உடனே சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புனேவை சேர்ந்த அந்த தனியார் நிறுவனமானது ஸ்கேன் கருவி பொருத்துவதற்கு கால தாமதம் செய்ததால் அரசு சார்பில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அரசு சார்பில் ரூ.8.05 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியும், ரூ.8 கோடியே 45 லட்சம் மதிப்பில் கேத்லேப் ஆஞ்சியோ கிராம் கருவியும் பொருத்தப்பட்ட நிலையில் இதனை நேற்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சாரு, எம்.பி செல்வராஜ், எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், டீன் ஜோசப்ராஜ், ஆர்.டி.ஒ சங்கீதா, நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், துணை தலைவர் அகிலாசந்திரசேகர், நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் ₹16.50 கோடி மதிப்பில் நவீன மருத்துவ கருவிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subrahmanian ,Tiruvarur Government Hospital ,Tiruvarur ,Health Minister ,M. Subramanian ,Tiruvarur Government Medical College Hospital ,Government Medical College Hospital ,M.Subramanian ,Thiruvarur Government Hospital ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...