- போலியோ சொட்டு முகாம்
- மருத்துவ நல்வாழ்வு மையம்
- திருப்பூர்
- கலெக்டர்
- கிறிஸ்தராஜ்
- போலியோ சொட்டு முகாம்
- மருத்துவ நல்வாழ்வு மையம்
- திருப்பூர் மாவட்டம்
- கிறிஸ்ட்ராஜ்
- போலியோ சொட்டு மருந்து
- மருத்துவ நல மையம்
- அலுவலகம்
- மருத்துவ
- நல மையம்
- தின மலர்
திருப்பூர், மார்ச் 4: திருப்பூரில், மருத்துவ நல்வாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் துவங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவ நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும், சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 895 மையங்கள் மூலமாகவும், நகர்ப்புறங்களில் 259 மையங்கள் மூலமாகவும் என மொத்தம் 1154 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதில் 26 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் 23 குழுக்களும் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டது.இப்பணிக்காக சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4616 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1.98 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படடது.
இம்முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து தரமானது, பாதுகாப்பானது உலக சுகதார நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்), உமா மகேஸ்வரி (1-ம் மண்டலம்) துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) முரளி சங்கர், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post மருத்துவ நல்வாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் appeared first on Dinakaran.