- ஐகோர்ட் கிளை
- மதுரை
- சென்னை உயர் நீதிமன்றம்
- மதுரை உயர் நீதிமன்றம்
- நில அளவை திணைக்களம்
- தொண்டு துறை
- கரூர்
- கலெக்டர்
- தஞ்சவேலு
மதுரை: கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத ஆணையர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நில அளவை துறை ஆணையர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கரூர் ஆட்சியர் தங்கவேலு உள்ளிட்டோரும் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்காத துறை ஆணையர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சாமி கோயிலுக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலங்களை மீட்க ஐகோர்ட் மதுரை கிளையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கோயில் நிலங்கள் மீட்பு: ஆணையர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.