×

திருமங்கலத்தில் பரபரப்பு மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மர்மப்பெட்டி

 

திருமங்கலம், மார்ச் 1: திருமங்கலம் நகரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் நுழைவாயில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் சிறிய சூட்கேஸ் வடிவிலான பெட்டி கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கோயில் ஊழியர் தண்டபாணி என்பவரிடம், பக்தர் ஒருவர் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கோயில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் யாரும் அந்த பெட்டியின் அருகே செல்லவோ, எடுக்கவோ வேண்டாம் என எச்சரித்தனர்.

இதுகுறித்து தகலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் கோயிலுக்கு வந்து அந்த மர்ம பெட்டியை கைப்பற்றினர். பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து சென்று அதனை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தனர். அந்த அந்த பெட்டியில் டிரோன் கேமரா மற்றும் அதற்கான உபகரணங்கள் இருந்தன. இதனால் அனைவரும் நிம்மதியடைந்தனர். பின்னர் பெட்டியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அதை கோயில் வாசலில் போட்டுச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமங்கலத்தில் பரபரப்பு மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மர்மப்பெட்டி appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman ,Thirumangalam ,Meenakshi Chokkanath temple ,Tirumangalam ,
× RELATED கண்மாயில் மீன் திருடியோர் மீது வழக்கு