×

கண்மாயில் மீன் திருடியோர் மீது வழக்கு

போடி, மே 30: போடி அருகே மீனாட்சிபுரத்தில் மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளது. இதில், மீன்பாசி ஏலம் விடும் வரை யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது என வைகை அணை மீன்வளத்துறை ஆய்வாளர் கவுதமன் அறிவித்துள்ளதுடன், கூட்டுறவு உறுப்பினர்கள் மூலம் கண்காணித்து வந்தார். இந்நிலையில், மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி, பிரகாஷ், முத்து, மணிகண்டன், மாரியப்பன், முத்துராமலிங்கம், ராஜா உள்ளிட்ட 9 பேர் கண்மாயில் திருட்டு வலை போட்டு அடிக்கடி மீன்களை பிடித்துள்ளனர்.

இதனை கண்டித்து தடுத்த பாதுகாப்பு பணியில் இருந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடன், தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு உறுப்பினர்கள் ஆய்வாளர் கவுதமனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், எஸ்.ஐ ஜெயலட்சுமி திருட்டுத்தனமாக மீன்களை பிடித்த 9 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post கண்மாயில் மீன் திருடியோர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Bodi ,Meenakshiyamman Kanmai ,Meenakshipuram ,Vaigai Dam Fisheries Department ,Inspector ,Gauthaman ,
× RELATED புகையிலை விற்ற 3 பேர் கைது