×

ஊழல் செய்த சேலம் பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

சேலம்: ஊழல் செய்த சேலம் பெரியார் பல்கலை.பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி பெரியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பெரியார் பல்கலைகழகத்தில் கணினி மென்பொருள்கள் வாங்கியதில் முறைகேடு, பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு, தீனதயாள் உபாத்தியா என்ற எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்ககூடிய நிதியில் முறைகேடு என பல்வேறு முறைகேடுகள் தற்போது பெரியார் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலு மீது நிருபிக்கபட்டுள்ளது. அவர்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு 2 முறை அறிவித்துள்ளது.

கடந்த 7-ம் தேதி பெரியார் பல்கலைகழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அரசு செயலாளர் ஏற்கனவே கடிதம் அனுப்பியும் 20 நாட்களுக்கு மேலாக பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் மீண்டும் கடிதம் அனுப்பி உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் ஜெகநாதன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 2-வது நாளாக பெரியார் பல்கலை. ஆசிரியர் சங்கதினர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து இந்த போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

குறிப்பாக நேற்று காலை பெரியார் பல்கலைகழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். பதிவாளர் தங்கவேலுவை துணைவேந்தர் ஜெகநாதன் பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

The post ஊழல் செய்த சேலம் பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,teachers union ,Salem ,Periyar University ,Thangavelu ,teachers' union ,Dinakaran ,
× RELATED யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல்...