×

துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி தலைவரின் பணியை தடுப்பதாக பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம்: குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையக்கரணை ஊராட்சியில், 3 கிராமங்கள் அடங்கியுள்ளன. இந்த ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவராக ராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவராக துரைசாமி மற்றும் வார்டு உறுப்பினராக சந்திரா, கோவிந்தராஜ், கேசவன், ராஜேஸ்வரி, அமரன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இந்த வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவருடன் இணைந்து கொண்டு, கிராமத்திற்கு வளர்ச்சி திட்டங்களை செய்யவிடாமல் தடுத்து வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கிராமத்திற்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படும் துணை தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். இம்மனுவில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும் சிஎஸ்ஆர் பணம் மூலம் ஏற்பாடு செய்து வருவதாகவும், ஆனால் அதை செய்ய விடாமல் அவப்பொழுது தடுத்து நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

The post துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி தலைவரின் பணியை தடுப்பதாக பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Panchakaranai Panchayat ,Kunradathur Panchayat Union ,Rajan ,Duraisamy ,panchayat ,Chandra ,Govindaraj ,Kesavan ,Rajeshwari ,Amaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...