×

முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு

 


தேனி: தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் சேக் முகமது (51). மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் இவரது சகோதரர் ஹக்கீம்(53). இவரது மகன் அகமது சபீர், மருமகள் டாக்டர் சபீயா பேகம். மூவரும் ஐதராபாத்தில் ஒரு தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் லாபத்தொகையாக ரூ.33 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 29 ஆயிரம் வரை தருவதாக அகமது சபீர், சித்தப்பா சேக் முகமதுவிடம் தெரிவித்தார். இதை நம்பிய சேக் முகமது ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தார். பின்னர் ஹக்கீம் குடும்பத்தினர், மதுரையில் புதிய பங்கு வர்த்தக நிறுவனத்தை துவங்கினர்.
இதில் முதலீட்டுக்கு கூடுதல் பணம் தருவதாக சேக் முகமதுவிடம் கூறியுள்ளனர்.

இதனை நம்பிஅவர் பல தவணைகளில் தனது மற்றும் உறவினர்கள் 20 பேர் கொடுத்த ரூ.1.67 கோடியை, வழங்கியுள்ளார். இதற்கு சில மாதங்கள் வட்டி கொடுத்துவிட்டு பின்பு ஏமாற்றி விட்டனர். இதேபோல் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த சையது சுல்தான்(50) என்பவரிடம் ரூ.60 லட்சம் பெற்றுள்ளனர். மோசடி தொடர்பாக சேக் முகமது, சையது சுல்தான், மதுரை தென் மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஹக்கீம், அகமது சபீர், சபீயா பேகம் ஆகிய மூவர் மீதும், 21 பேரிடம் ரூ.2.47 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Sheikh Mohammad ,Periyakulam, Theni district ,Hakeem ,Sadasivam, Madurai ,Ahmed Sabir ,Dr. ,Sabiya Begum ,Hyderabad ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்