×

மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்!

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் திர்த்புரி நகரில் மராட்டிய அரசு போக்குவரத்துக்கழக பேருந்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

மகாராஷ்டிராவில் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ஜல்னா மாவட்டம், அம்பாட் தாலுகாவின் தீர்த்தபுரி நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் சவுக்கில் இன்று காலை மராத்தா இடஒதுக்கீடு கோரி போராட்டக்காரர்கள் அரசுப் போக்குவரத்துப் பேருந்தை எரித்தனர்.

போராட்டக்காரர்கள் மராத்தா இடஒதுக்கீடு கொள்கைகள் தொடர்பாக மாநில அரசின் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்தில் மற்ற வாகனங்களுக்கு சேதமோ அல்லது பயணிகளுக்கு காயமோ ஏற்படாத நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேருந்திற்கு தீ வாய்த்த சம்பவத்தை தொடர்ந்து ஜல்னா மாவட்டத்தில் மராட்டிய அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தில் தீப்பிடித்து எரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

The post மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Maharashtra ,Maharashtra State Transport Corporation ,Tirtpuri, Maharashtra ,Maratha ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...