×
Saravana Stores

மாசி மகத்தையொட்டி பூம்புகார் கடற்கரையில் தீர்த்தவாரி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் புகழ்பெற்ற சுவேதாரணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஆதிச் சிதம்பரம் என அழைக்கப்படும் இக்கோவிலில் நடராஜர் தனி சபையில் அருள் பாலித்து வருகிறார். இக்கோயில் காசிக்கு இணையாக கருதப்படுகிறது இந்நிலையில் கடந்த 21ம் தேதி இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பௌர்ணமியான நேற்று, மக நட்சத்திரத்தில் சந்திரசேகரர் சுவாமி காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் புனித நீராடி தீர்த்தவாரி செய்வார். கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மகா நட்சத்திரம் பௌர்ணமி நாளில் அதிகாலை வந்ததால் சந்திரசேகரர், அஸ்திர தேவருடன் நேற்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டார். வழிநெடுக பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். அதிகாலை சரியாக 6 மணிக்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, தீர்த்த வாரி நடந்தது. அப்பொழுது திரளான பக்தர்கள் கடல் மற்றும் காவிரிகலக்கும் இடத்தில் நீராடி சுவாமியை வழிபட்டனர்.

The post மாசி மகத்தையொட்டி பூம்புகார் கடற்கரையில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Tags : Masi ,Magathaioti ,Bombukar ,Sirkazhi ,Swedaraneshwarar Temple ,Thiruvengat ,Mayiladuthura district ,ECHO ,MERCURY ,NATARAJAR ,TANI ,SABHA ,ICKOVIL ,ADICH ,CHIDAMBARAM ,Ikoil ,Kasi ,Magathaioti Poombukar Beach ,
× RELATED பூம்புகார் விற்பனை நிலையத்தில்...