×

பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்ட தனியார் மேலாளர் மீது வழக்கு

புதுச்சேரி, பிப். 25: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் ஒரு தனியார் அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் நடேசன் (55). எலக்ட்ரிக்கல் காண்டிராக்டராக உள்ளார். அபார்ட்மெண்டில் இவர்களது வீட்டிற்கு எதிரே மூர்த்தி (50) என்பவர் வசித்து வருகிறார். திருபுவனையில் தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் இவரது குடும்பத்தினருக்கும், நடேசன் குடும்பத்துக்கும் இடையே வீட்டு வாசலில் கோலம் போடுவதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் எதிரொலியாக சம்பவத்தன்று தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த நடேசனின் மனைவியை செல்போனில் போட்டோ எடுத்த மூர்த்தி, அவற்றை அபார்ட்மெண்ட் அசோசியேஷன் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டதாக தெரிகிறது. இதை பார்த்த நடேசன் மனைவி அதிர்ச்சியடைந்தார்.

தனது புகைப்படத்தை ஆபாசமாக எடுத்து வெளியிட்டதாக மூர்த்தியை அவர் தட்டிக்கேட்ட நிலையில், அவரை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் நடேசனின் மனைவி முறையிட்டார். அதில் மேற்கண்ட, தகவலை தெரிவித்து மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார், 2 பிரிவுகளின்கீழ் மூர்த்தி மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்ட தனியார் மேலாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Natesan ,Redyarpalayam, Puducherry ,Murthy ,Tirupur ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...