×

காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய விஜயதரணி எம்எல்ஏ பதவி பறிபோகிறது: விளவங்கோடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்?

கட்சி தாவல் சட்டத்தால் விஜயதரணியின் எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் எம்எல்ஏ பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

சட்டப்பேரவை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சபாநாயகர் முடிவெடுத்த பிறகு, அந்த தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பாணை வெளியிடும். அந்த அறிவிப்பாணையை தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் அனுப்பி வைக்கும். அதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு ஆறு மாத காலங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும்’’ என்றார்.

The post காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய விஜயதரணி எம்எல்ஏ பதவி பறிபோகிறது: விளவங்கோடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்? appeared first on Dinakaran.

Tags : MLA ,Vijayatharani ,Congress ,BJP ,Vilavankode ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthagai ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்....