×

உலக ஜனநாயக தரவரிசை 62வது இடத்தில் இருந்து 66க்கு சரிந்தது இந்தியா

புதுடெல்லி: உலக ஜனநாயக தரவரிசையில் 62வது இடத்தில் இருந்து இந்தியா 66வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேர்தல் ஜனநாயகம் குறித்த அறிக்கை தயாரித்து வெளியிடுகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுவரை உலக ஜனநாயக தரவரிசை பட்டியலில் 62வது இடத்தில் இருந்த இந்தியா 66வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேர்தல் ஜனநாயகம் குறித்து அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் ஆலோசகர் குழுவிற்கு இந்தியாவிலிருந்து அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியான முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா இந்த பட்டியல் தயாரிப்பு பற்றி குறைகூறியுள்ளார். இந்த பட்டியல் இந்தியாவில் தேர்தல் நடத்தை அளவு மற்றும் நிலைத்தன்மையை பிரதிபலிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

The post உலக ஜனநாயக தரவரிசை 62வது இடத்தில் இருந்து 66க்கு சரிந்தது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,International Institute for Democracy and Electoral Assistance ,Dinakaran ,
× RELATED எல்லா நோய்களுக்கும் சிகிச்சை...