- திருவாலங்காடு வதனீஸ்வரர் கோயில்
- Kumbabhishekam
- Kumbabhishek
- வடரணீஸ்வரர் கோயில்
- Thiruvalangadu
- வந்தற்குழலி உடனுறை
- திருத்தணி
- சுப்பிரமணிய
- சுவாமி
- கோவில்
- வந்தற்குழலி உடனுறை
- ஆடல் வல்லன் நடராஜா
- திருவாலங்காடு வடரண்யேஸ்வரர்
திருத்தணி, பிப். 22: திருவாலங்காடு, வண்டார்குழலி உடனுறை, வடாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயில் திருவாலங்காடு, வண்டார்குழலி உடனுறை, வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயில் ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஜம்பெரும் சபைகளுள் முதல் சபையான இரத்தின சபையை உடையது திருவாலங்காடு திருத்தலமாகும். பத்ரகாளியுடன் நடராஜர் போட்டியிட்டு நடனம் புரிந்து வலது பாதம் ஊன்றி இடது திருப்பாதத்தை காதளவோடு உயர எடுத்து தாண்டவம் செய்தருளிய தலம்.
இத்தகு சிறப்புமிகு திருவாலங்காடு திருத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆகியோர் மேற்பார்வையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன் துணைப் பெருந்தலைவர் சுஜாதா மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சு.ஸ்ரீதரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான க.ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன், மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அர்ச்சகர்கள் திருக்கோயில் பணியாளர்கள், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
The post திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் : அமைச்சர்கள், எல்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.