×

பெண் தற்கொலை

பேரையூர்: பேரையூர் துர்கா நகரை சேர்ந்தவர் செந்தில். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள ஒயின்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (28). செந்தில் வேலைக்கு சென்று வர டூவீலர் வாங்க வேண்டும் என மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. தற்போதுள்ள கஷ்டமான சூழ்நிலையில் டூவீலர் அவசியமா என ஜெயலட்சுமி கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜெயலட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Peraiyur ,Durga ,Senthil ,Andibar, Theni district ,Jayalakshmi ,Sent ,
× RELATED கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்