×

முழுமையான இழப்பீடு கோரி என்எல்சி அதிகாரிகள் நிலம் அளவீடு பணி தடுத்து நிறுத்தம் கரிவெட்டி கிராமத்தில் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு, பிப்.21: சேத்தியாத்தோப்பு அருகே முழுமையான இழப்பீடு வழங்கக்கோரி கரிவெட்டி கிராமத்தில் என்எல்சி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமம் அருகே நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரிவெட்டி கிராமத்தில் பலருக்கும் இன்னும் முழுமையான இழப்பீடு, வாழ்வாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்காக அவர்கள், போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை கிராமத்தின் உள்ளே யாரும் உள்ளே வரக்கூடாது பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை, என்எல்சி அதிகாரிகள் சேர்ந்து பல இடங்களில் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அப்போது இழப்பீடு கிடைக்காத மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி பணிகள் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post முழுமையான இழப்பீடு கோரி என்எல்சி அதிகாரிகள் நிலம் அளவீடு பணி தடுத்து நிறுத்தம் கரிவெட்டி கிராமத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : NLC ,Karivetti ,Chethiyathoppu ,Neyveli NLC ,Karivetty village ,Cuddalore district ,Karivetty ,Dinakaran ,
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...