×

ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் அமுதன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், ஈவிஎம் மெசிகனை தடை செய்து பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை கண்டித்தும்,வேளாண் பொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் மாநிலம், மாவட்டம், நகரம் மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள்,காங்கிரஸ் கட்சியின்,சிபிஐ கட்சியின் சிபிஐஎம் கட்சியின் மற்றும் கூட்டணி கட்சியினர் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Devakottai ,Liberation Tigers Party ,Devakottai Martyrs' Park ,City Secretary ,Amuthan ,EVM ,
× RELATED பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு