×

புதிய தலைவருக்கு என்னுடைய பூரண ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு: செல்வப்பெருந்தகைக்கு ப.சிதம்பரம் வாழ்த்து


சென்னை; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., 21.2.2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார். இந்நிலையில் செல்வப்பெருந்தகைக்கு முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நாளை அவர் புதிய பொறுப்பை ஏற்கும் நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தலைவருக்கு என்னுடைய பூரண ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நாம் 39ல் 39 வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அவர் தலைமையில் செயல்பட வேண்டும் என்று எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post புதிய தலைவருக்கு என்னுடைய பூரண ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு: செல்வப்பெருந்தகைக்கு ப.சிதம்பரம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Chennai ,Selvaperunthagai ,Tamil Nadu Congress Committee ,Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,Selvaperundagai ,K. Selvaperunthakai ,MLA ,Selvaperunthakai ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர்...