- ஸ்ரீபெரும்புதூர்
- சென்னை
- காங்கிரஸ் குழு
- மாநில தலைவர்
- செல்வப்பெருந்தகாய்
- திருப்புகழ் குழு
- Mullainagar
- தனலட்சுமி நகர்
- அஷ்டலட்சுமி
- தின மலர்
சென்னை: திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். “கடந்த வாரம் பெய்த மழையால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முல்லை நகர் தனலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகரில் வெள்ளம் ஏற்பட்டது. வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் அரைகுறையாக நடந்துள்ளது. கடந்த காலங்களில் 20 நாட்கள் மழை நீர் தேங்கிய நிலையில் தற்போது ஓரிரு நாட்களில் மழை நீர் வடிந்துவிடுகிறது. திருப்புகழ் கமிட்டியின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். நான் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவது அமைச்சர் துரைமுருகன் கையில் தான் உள்ளது” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்குவதாக சொல்லக்கூடிய பகுதிகளில் அரசு கவனம் செலுத்தும் என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
The post ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்; செல்வப்பெருந்தகை கோரிக்கை appeared first on Dinakaran.