×

கடலூரில் பரபரப்பு தொழிற்பயிற்சி நிலைய வகுப்பறையில் மாணவன் தலையில் விழுந்த மின்விசிறி

கடலூர், பிப். 20: கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள வகுப்பறையில் மாணவன் தலையில் மின்விசிறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் செம்மண்டலத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட்டதும், மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு ஒரு வகுப்பறையில் இருந்த மின்விசிறி திடீரென வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவன் தலையில் விழுந்தது. இதை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கடலூரில் பரபரப்பு தொழிற்பயிற்சி நிலைய வகுப்பறையில் மாணவன் தலையில் விழுந்த மின்விசிறி appeared first on Dinakaran.

Tags : Sansamu Vocational Training Center ,Cuddalore ,Cuddalore Government Vocational Training Institute ,Government Vocational Training Center ,Semmandalam, Cuddalore ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!