- மதுரை எய்ம்ஸ்
- யூனியன் நிதி
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- புதுச்சேரி
- மீ.
- சுப்பிரமணியன்
- மத்திய நிதி அமைச்சர்
- தமிழ்நாடு சுகாதார துறை
- ஆரோவில்
- எம் சுப்பிரமணியன்
புதுச்சேரி, பிப். 19: மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய நிதி அமைச்சர், உண்மை தெரிந்தும் பொய் தான் பேசுவார் என ம.சுப்பிரமணியன் கூறினார். புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவிலில் நேற்று நடந்த மராத்தான் ஒட்டப்பந்தயத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து கலந்து கொண்டனர். தொடர்ந்து, புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், புதுவையை தொடர்ந்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பஞ்சு மிட்டாய்கள் ஆய்வு செய்ததில் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்குகிற வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏன்? காலதாமதம் என்றால், தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தரவில்லை என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்து வந்தவர் எடிப்பாடி பழனிச்சாமி. நிலஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்டுவார். நிதி பெற்று தருவதில் காலதாமதம் ஏற்பட்டது என்று உண்மையாக காரணத்தை கூறி இருக்கலாம். உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என கூறியிருந்தார். இதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.
2019ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவல் எல்லாம் தெரிந்த பிறகு கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் நிலஆர்ஜிதம் செய்து தராததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படி தெரிந்தே பொய் சொல்பவர். மேலும், புதுவையில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார், என்றார்.
The post மதுரை எய்ம்ஸ் விவகாரம் ஒன்றிய நிதி அமைச்சர் உண்மை தெரிந்தும் பொய்தான் பேசுவார்: அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.