×

இலவச மருத்துவ முகாம்

களக்காடு, பிப்.16: களக்காட்டில் இந்தியன் ஆயில் மற்றும் மதன் ஏஜென்சி சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இந்தியன் ஆயில் நெல்லை மாவட்ட விற்பனை அதிகாரி கன்னியப்பன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனைகள் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை இந்தியன் ஆயில் டீலர் மதனகோபால் செய்திருந்தார்.

The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Indian Oil ,Methane Agency ,Kalakat ,Indian Oil Rice ,Kanniappan ,Camp ,Madurai Meenakshi Hospital ,Medical Camp ,Dinakaran ,
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு