×

திருத்துறைப்பூண்டியில் புதிய புறவழிச்சாலை திட்டம் விரைவில் செயல்படுத்துங்கள்

 

திருத்துறைப்பூண்டி, பிப்.16: திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை திட்டம் (2) விரைவில் செயல்படுத்துங்கள் என்று சட்டசபையில் எம்எல்ஏ மாரிமுத்து பேசினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து சட்டப்பேரவையில் பேசியதாவது, விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும், ஊராட்சி (ம) ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சித் துறையில் ஒப்பந்த வெளியிட பணியாளர்களுக்கான பணி பாதுகாப்பு காலம் முறை ஊதியம் அரசு உறுதிப்படுத்த வேண்டும்,

கோயில் மனையில் குடியிருப்பவர்களுக்கும், வணிகம் செய்பவர்களுக்கும் வாடகை முறை ரத்து செய்து பகுதி முறையை செயல்படுத்த வேண்டும், மருத்துவத்துறையில் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களின் பணி உறுதி செய்ய வேண்டும், அரசு பணியாளர்களின் பழைய ஊதிய முறையை செயல்படுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் சட்டப்படியான ஊதியம் உறுதி செய்ய வேண்டும்,

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வர வேண்டும். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை திட்டம்-2 விரைவில் செயல்படுத்த வேண்டும், உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை குறித்து சட்டமன்றத்தில் பேசினார்.

The post திருத்துறைப்பூண்டியில் புதிய புறவழிச்சாலை திட்டம் விரைவில் செயல்படுத்துங்கள் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Thiruthurapoondi ,MLA Marimuthu ,Tiruvarur District ,Legislative Assembly ,Agricultural Labor Welfare Board ,Panchayat (M) Rural Development Department ,
× RELATED திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் சனி பிரதோஷ விழா